தமிழ்நாடு
ஸ்டிரைக்: 3 மாவட்ட மருந்து வணிகர்கள் புறக்கணிப்பு
ஸ்டிரைக்: 3 மாவட்ட மருந்து வணிகர்கள் புறக்கணிப்பு
தமிழகத்தில் நாளை நடைபெற உள்ள போராட்டத்தில் 3 மாவட்ட மருந்து வணிகர்கள் பங்கேற்க மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் மூலம் மருந்து விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் மே30-ந்தேதி மருந்து வணிகர்கள் கடையடைப்பு போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர். இந்நிலையில் நாளை நடக்கவுள்ள கடையடைப்பு போராட்டத்தில் சென்னை, மதுரை ,கரூர் ஆகிய மாவட்ட மருந்து வணிகர்கள் பங்கேற்க மாட்டார்கள் என சென்னை மாவட்ட மருந்து வணிகர்கள் சங்கத் தலைவர் மோகன்குமார் தெரிவித்துள்ளார்.