மதுரையில் மது பானத்துக்கான ரசாயன திரவம் காய்ச்சிய மூவர் கைது

மதுரையில் மது பானத்துக்கான ரசாயன திரவம் காய்ச்சிய மூவர் கைது

மதுரையில் மது பானத்துக்கான ரசாயன திரவம் காய்ச்சிய மூவர் கைது
Published on

ஊரடங்கு தடைச்சட்டம் அமலில் உள்ள நிலையில், மதுரை மாநகரில் உள்ள மதுபான கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால் மதுபான பிரியர்கள் மது குடிக்க முடியாமல் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.இந்நிலையில் மதுரை கூடல்நகர் பகுதியில் சிலர் மதுபானத்துக்கான ரசாயன திரவம் காய்ச்சுவதாக கூடல்புதூர் போலீசுக்கு தகவல் வந்ததையடுத்து,மதுவிலக்கு தடுப்பு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஐசக் சாமுவேல் தலைமையிலான குழு சம்பவ இடத்திற்கு சென்றனர்.

அப்போது அங்கு மூன்று பேர் மது பானத்துக்கான ரசாயன திரவம் காய்ச்சி கொண்டிருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து அவர்களை போலீஸ் படையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர். போலீசாரின் முதற் கட்ட விசாரணையில் அவர்கள் ஆணையூர் இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த சிவராஜ், லட்சுமிகாந்தன், ஜெனன் என்பது தெரியவந்தது.

அதே போல மதுரை அண்ணா நகரை அடுத்த கோமதிபுரம் ஜே ஜே நகர் பகுதியில் சினி, ரவை, பதனி உள்ளிட்ட பொருட்களை கொண்டு சட்டவிரோதமாக போலியான கள் தயாரித்த 4 பேரை கருப்பாயூரணி காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும், அவர்களிடம் இருந்து 100 லிட்டர் கள்ளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் கோமதி புரத்தைச் சேர்ந்த மகேஸ்வரன் மற்றும் ஓடைப்பட்டி பகுதியைச் சேர்ந்த சேகர், மணிகண்டன், ராம்குமார் எனபது தெரியவந்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com