தமிழ்நாடு
'செம்பரம்பாக்கம் டூ கடல்..'-இதுதான் தண்ணீர் செல்லும் பாதை!
'செம்பரம்பாக்கம் டூ கடல்..'-இதுதான் தண்ணீர் செல்லும் பாதை!
செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்ட நிலையில் தண்ணீர் கடலில் கலக்கும் வழித்தடம் குறித்து தெரிந்துகொள்வோம்.
நிவர் புயல் இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரை அதிதீவிர புயலாக கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. மாமல்லபுரத்திற்கும் காரைக்காலுக்கு இடையே புயல் கரையை கடக்க உள்ளது. இதனிடையே தொடர்ந்து பெய்து வரும் மழையால் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் அளவு 22 அடியை நெருங்க உள்ளது.
இதனால் இன்று மதியம் 12 மணியளவில் முதல்கட்டமாக 1000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. இந்நிலையில் செம்பரம்பாக்கம் முதல் கடல் வரை செல்லும் வழித்தடம் என்ன? இந்த வீடியோவில் பார்க்கலாம்

