பட்டப்பகலில் குடியிருப்பிற்கு வந்த ‘சிறுத்தை’ - ‘கேட்’டால் பிழைத்த நாய்கள்

பட்டப்பகலில் குடியிருப்பிற்கு வந்த ‘சிறுத்தை’ - ‘கேட்’டால் பிழைத்த நாய்கள்

பட்டப்பகலில் குடியிருப்பிற்கு வந்த ‘சிறுத்தை’ - ‘கேட்’டால் பிழைத்த நாய்கள்
Published on

நீலகிரியில் பகல் நேரத்தில் நாய்களை பிடிக்க வந்த சிறுத்தை, தடுப்பு கதவுகளை தாண்டி வரமுடியாமல் திரும்பி சென்றது. 

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள ‘ட்ரம்ளா’ பகுதி தேயிலை தோட்டம் வனத்தை ஒட்டிய பகுதியாகும். இங்கு உள்ள குடியிருப்பு பகுதிக்கு காட்டெருமை, கரடி போன்ற வனவிலங்குககள் வருவது வாடிக்கையாகிவிட்டது. இந்நிலையில், அங்குள்ள குடியிருப்பு பகுதியில் பகல் நேரத்தில் நாய்களை பிடிக்க சாலையில் சிறுத்தை ஒன்று ஓடி வந்தது. 

இதனால், வீட்டிலிருந்த நாய்கள் குலைத்து அலறின. ஆனால் வீட்டின் இரும்புக் கேட்டை தாண்டி வந்து சிறுத்தையால் நாய்களை பிடிக்க முடியவில்லை. அதற்குள் வீட்டில் இருந்தவர்கள் ஓடிவந்து கூச்சலிட்டதால், சிறுத்தை நாய்களை பிடிக்காமல் வந்த வழியே ஓடிவிட்டது.

இந்தக் காட்சிகள் வீட்டில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதேபகுதியில் இரண்டு மாதத்திற்கு முன்பு சிறுத்தையும், கருஞ்சிறுத்தையும் இரவில் உலா வந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com