ஆற்றங்கரையோரம் சிறுத்தை நடமாட்டம் - குளிக்க வர வேண்டாம் என எச்சரிக்கை

ஆற்றங்கரையோரம் சிறுத்தை நடமாட்டம் - குளிக்க வர வேண்டாம் என எச்சரிக்கை

ஆற்றங்கரையோரம் சிறுத்தை நடமாட்டம் - குளிக்க வர வேண்டாம் என எச்சரிக்கை
Published on

சிறுத்தை நடமாட்டத்தையடுத்து பவானி ஆற்றங்கரைக்கு துணி துவைக்கவோ, குளிக்கவோ மக்கள் செல்லக்கூடாது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சிறுத்தை, புலிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சிறுத்தைகள் தனது எல்லையை விரிவுபடுத்துவதால் வனத்தைவிட்டு வெளியேறி கிராமத்துக்குள் புகுந்து கால்நடைகளை வேட்டையாடுவது வழக்கமாக உள்ளது. இதற்கேற்ப, சில தினங்களாக சத்தியமங்கலம் நகராட்சி எல்லையை ஒட்டியுள்ள செண்பகபுதூர் மேட்டூர் பகுதியில் சிறுத்தை நுழைந்து கிராம மக்களை அச்சுறுத்தி வருகிறது.

இந்நிலையில், அரியப்பம்பாளையம் என்ற இடத்தில் சாலையின் குறுக்கே சிறுத்தை ஓடியதால் அவ்வழியாக சென்ற லாரி ஓட்டுநர் கிராம மக்களுக்கு தகவல் தெரிவித்தார். அங்குள்ள கடையில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தபோது சிறுத்தை சாலையை கடந்தது உறுதியானது. சிறுத்தையின் கால்தடத்தை ஆய்வுசெய்தபோது குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தது தெரியவந்தது.

பொதுமக்கள் அன்றாட பணியில் ஈடுபடும்போது கரும்புத்தோட்டம், மறைவான இடங்களுக்கு செல்ல வேண்டாம் என்றும், பவானி ஆற்றங்கரையோரம் துணி துவைக்கவோ, குளிக்கவோ கூடாது என அரியப்பம்பாளையம் பேரூராட்சி சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com