நீட் தேர்வு அதகளம்: மாணவிகளுக்கு சோதனை மேல் சோதனை... தலைமுடியை கூட ஆராய்ந்த அதிகாரிகள்!

நீட் தேர்வு அதகளம்: மாணவிகளுக்கு சோதனை மேல் சோதனை... தலைமுடியை கூட ஆராய்ந்த அதிகாரிகள்!

நீட் தேர்வு அதகளம்: மாணவிகளுக்கு சோதனை மேல் சோதனை... தலைமுடியை கூட ஆராய்ந்த அதிகாரிகள்!
Published on

தமிழ்நாடு முழுவதும் கடும் கட்டுப்பாடுகளுடன் மருத்துவப் படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வான நீட் தேர்வை மாணவர்கள் இன்று எழுதினர். நாடு முழுவதும் மருத்துவப் படிப்புக்கு ஒரே நுழைவுத் தேர்வை மாணவர்கள் எழுத வேண்டும் என்று மத்திய அரசு கூறியது. இதற்கு தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்கள் எதிர்ப்புத் தெரிவித்தன. இருப்பினும் மத்திய அரசின் அறிவிப்பின்படி, இன்று தேர்வு நடந்தது. அப்படி நடந்த தேர்வில் பலத்த கெடுபிடிகள் கடைபிடிக்கப்பட்டன.

அந்தவகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்குட்பட்ட குன்னம் ஜேப்பியார் தொழில்நுட்பக் கல்லூரியில் 781 நபர்களும், சுங்குவார்சத்திரம் மகரிஷி பன்னாட்டு பள்ளியில் 213 நபர்களும், படப்பை ஆல்வின் இன்டர்நேஷனல் பள்ளியில் 840 நபர்களும், சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரியில் 480 நபர்களும் என்ற அடிப்படையில் மொத்தம் 2,314 மாணவ மாணவிகள் நீட் தேர்வு எழுதுகின்றனர். காஞ்சி மட்டுமன்றி தேர்வுக்காக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான காஞ்சிபுரம், வேலூர், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து இன்று காலை முதலே பெற்றோருடன் மாணவர்கள் தேர்வு மையத்திற்கு முன்பு காத்திருந்தனர். 

வெகுநேர காத்திருப்புக்குப் பின், காலை11 மணி முதல் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி, மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் அனைவருக்கும் தெர்மோ ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டது. பின்பு மாணவர்களை 2 மீட்டர் இடைவெளியில் ஒவ்வொருவராக வரவழைத்து விண்ணப்பங்களை ஆய்வு செய்து பின்னர் உடல் முழுவதும் பரிசோதனை செய்து அவர்கள் தேர்வு அறைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

இதற்கிடையில் ‘மாணவர்களை சோதனைக்கு உட்படுத்துகிறோம்’ என்கிற பெயரில் தலை முதல் கால் வரை மெட்டல் டிடெக்டர் வைத்து சோதித்தனர் அதிகாரிகள். அதிகபட்ச கொடுமையாக தலைவாரி பின்னலிட்ட மாணவிகள் சடைகளையெல்லாம் சோதித்துப் பார்த்தனர். தேர்வு எழுத வந்த மாணவிகள் தலைவிரி கோலமாக வரிசையில் நின்றிருந்த மாணவிகளை பெற்றோர் சோகமாக பார்த்துக் கொண்டிருந்தகாட்சிகள் காண்போருக்கும் வேதனையாக, அவதிப்படுவோருக்கும் அல்லலாக அமைந்துவிட்டது. மேலும் பின்னலிட்ட மாணவிகள் சடைமுடி எல்லாம் சோதித்து பார்த்த பிறகு தேர்வு நடத்தும் அலுவலர்கள் மாணவிகளுக்கு தலைவாரி சடை பின்னி விட்ட நிகழ்வுகளும் ஓரிரு இடத்தில் நடந்தது.

இப்படி நீட் தேர்வு என்கின்ற பெயரில் தொடர்ச்சியாக இந்த ஆண்டும் அதகளம் தொடர்கிறது.

- பிரசன்னா

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com