தமிழ்நாடு
பள்ளி கட்டட தன்மையை உறுதி செய்யுங்கள்: திருவாரூர் மாவட்ட ஆட்சியர்
பள்ளி கட்டட தன்மையை உறுதி செய்யுங்கள்: திருவாரூர் மாவட்ட ஆட்சியர்
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளின் கட்டட தன்மை, மின்பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. டெல்டா மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும் பள்ளிகளின் கட்டட தன்மை, மின்பாதுகாப்பு போன்றவற்றை தலைமையாசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும் அவர் அறிவுறித்தியுள்ளார்.

