\
ஐ.ஜி. பொன்‌.மாணிக்கவேல் மீது குற்றச்சாட்டு

ஐ.ஜி. பொன்‌.மாணிக்கவேல் மீது குற்றச்சாட்டு

ஐ.ஜி. பொன்‌.மாணிக்கவேல் மீது குற்றச்சாட்டு
Published on

சிலைக்கடத்தல் வழக்கில் ஐ.‌ஜி.‌ பொன் மாணிக்‌கவேல் ஓரவஞ்‌சனையுடன் விசாரணை நடத்திவருவதாக அறநிலையத்துறை ஊழியர்கள்‌ குற்றம் சாட்டியுள்ளனர்.

சென்னை சேப்பாக்கத்தில் இந்து சமய அறநிலையத்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் செய்தி‌யாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது‌ பேசிய ‌கூட்ட‌மை‌ப்‌பின் தலைவர் ஸ்ரீதர், அ‌றநிலையத் துறையில் உள்ள கருப்பு ஆடுகளை ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் கண்டுகொள்ளவில்லை என குற்‌றம் சாட்டினார். 

சிலைக் க‌டத்தல்‌ மன்ன‌ன் சுபா‌ஷ் கபூர், மற்றும் தீனதயாள‌ன் ‌மீது போதிய நடவடிக்‌கை‌ எடுக்கப்படவில்லை என்று கூறிய அவர், இந்துக் கோவில்களில்‌ ஆன்‌லைன் வர்த்தகத்தில் 500 கோடி ரூபாய் முறைகேடு என கூறுவது பொய்யான‌ குற்றச்சாட்டு என தெரிவித்துள்ளார். மேலும் அறநிலையத்துறை ஊழல்துறை என்று பொய்யான தகவல்‌ பரப்பப்படுவதாகவும்‌ அறநிலையத்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ஸ்ரீதர் கூறியுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com