\
ஆக்கிரமிப்பு வழக்கு: மா.சுப்பிரமணியன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

ஆக்கிரமிப்பு வழக்கு: மா.சுப்பிரமணியன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

ஆக்கிரமிப்பு வழக்கு: மா.சுப்பிரமணியன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
Published on

போலி ஆவணங்களைப் பயன்படுத்தி தொழிலாளர் குடியிருப்புகளை ஆக்கிரமித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

சென்னை கிண்டியில் உள்ள சிட்கோவிற்குச் சொந்தமான தொழிலாளர் குடியிருப்புகளை, சட்டத்திற்கு புறம்பாக ஆக்கிரமித்ததாக மா.சுப்பிரமணியன் மற்றும் அவரின் மனைவி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட இந்த வழக்கில், புலன்விசாரணை முடிவடைந்துள்ளது. 

இதைத்தொடர்ந்து, போலி ஆவண மோசடி, ஏமாற்றுதல், கூட்டுசதி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மா.சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com