சாரல் விழா: லேசர் ஒளியில் கலர் ஃபுல்லாக ஜொலிக்கும் குற்றால அருவிகள்

சாரல் விழா: லேசர் ஒளியில் கலர் ஃபுல்லாக ஜொலிக்கும் குற்றால அருவிகள்
சாரல் விழா: லேசர் ஒளியில் கலர் ஃபுல்லாக ஜொலிக்கும் குற்றால அருவிகள்

சாரல் விழாவை முன்னிட்டு லேசர் ஒளி வெள்ளத்தில் ஜொலிக்கும் குற்றால அருவிகளை கண்டு சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சீசன் களைகட்டும். இந்த ஆண்டு முன்கூட்டியே தென்மேற்கு பருவமழை துவங்கியதால் பிரதான அருவியான குற்றால மெயின் அருவி, ஐந்தருவி, புலியருவி, சிற்றருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அருவிகளில் தற்போது தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுக்கிறது.

தென்காசி மாவட்டம் உதயமான பின்னர் முதல் முறையாக குற்றாலத்தில் சாரல் விழா குற்றாலம் கலைவாணர் அரங்கில் கடந்த 5 ஆம் தேதி தொடங்கியது. சாரல் திருவிழாவை முன்னிட்டு குற்றாலத்தில் தற்போது ஏராளமானோர் குவிந்து வருகின்றனர்.

இதையடுத்து குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டும் அழகை லேசர் ஒளி வெள்ளத்தில் ஜொலிப்பதை பார்த்து சுற்றுலா பயணிகள் ஆனந்தம் அடைந்துள்ளனர். சாரல் திருவிழா குற்றாலத்தில் களைகட்டியுள்ள நிலையில் குற்றாலம், பழைய குற்றாலம், ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளும் தற்போது லேசர் ஒளி வெள்ளத்தில் ஜொலிக்கின்றன. இந்த காட்சியை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.

தற்போது அனைத்து அருவிகளிலும் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் கலர் ஃபுல் குளியலிட்டு சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com