\
கட்சி கட்டமைப்பின் மாற்றங்கள் கடுமையாக இருக்கும் - கமல்ஹாசன் எச்சரிக்கை

கட்சி கட்டமைப்பின் மாற்றங்கள் கடுமையாக இருக்கும் - கமல்ஹாசன் எச்சரிக்கை

கட்சி கட்டமைப்பின் மாற்றங்கள் கடுமையாக இருக்கும் - கமல்ஹாசன் எச்சரிக்கை
Published on: 

மக்கள் நீதி மய்யம் கட்சியில் நடக்க உள்ள மாற்றங்கள் கடுமையாக இருக்கும் என்று நிர்வாகிகளை கமல்ஹாசன் எச்சரித்துள்ளார்.

சட்டப்பேர்வைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு முக்கிய நிர்வாகிகள், வேட்பாளர்கள் உடன், அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஆலோசனை நடத்தினார். வாக்கு சதவீதம் குறைந்தது, நிர்வாகிகளின் தேர்தல் பணி ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. அப்போது பேசிய கமல்ஹாசன், உடனடியாக கட்சியின் கட்டமைப்பில் மாற்றங்கள் வரும் எனவும், அது கடுமையாகவே இருக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதோடு, மக்கள் நீதி மய்யத்திற்கு புத்துணர்ச்சியளிக்கும் புதிய முடிவுகளை தான் விரைவில் அறிவிக்கவுள்ளதாகவும் இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com