சசிகலாவுக்கு எதிராக இணையதளத்தில் கையெழுத்து இயக்கம்

சசிகலாவுக்கு எதிராக இணையதளத்தில் கையெழுத்து இயக்கம்

சசிகலாவுக்கு எதிராக இணையதளத்தில் கையெழுத்து இயக்கம்
Published on

சசிகலா முதலமைச்சராக பதவியேற்பதற்கு எதிராக கையெழுத்து இயக்கம் ஒன்று ஆன்லைனில் தொடங்கப்பட்டுள்ளது.

change.org என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் கையெழுத்துகள் பெறப்பட்டு வருகிறது. பிப்ரவரி 5ஆம் தேதி இந்த கையெழுத்து இயக்க தளம் உருவாக்கப்பட்டுள்ளது. சசிகலா முதலமைச்சராவதற்கு எதிராக இதுவரை சுமார் ஒரு லட்சத்து 44 ஆயிரத்துக்கும் அதிகமான கையெழுத்துகள் பெறப்பட்டுள்ளது. அந்த இணைய தளம் தொடங்கப்பட்ட 15 நிமிடத்திற்குள் 10 ஆயிர‌ம் பேர் தங்களது கையெழுத்துகளை பதிவு செய்துள்ளனர். ஆன்லைன் மூலம் பெறப்படும் இந்த கையெழுத்துக்களை குடியரசுத் தலைவர், தமிழக ஆளுநர் மற்றும் தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.‌

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com