தமிழ்நாடு
ஆன்லைனில் ஈபி பில் கட்டுறவங்களா நீங்க... இணையதள முகவரிகள் மாற்றம்
ஆன்லைனில் ஈபி பில் கட்டுறவங்களா நீங்க... இணையதள முகவரிகள் மாற்றம்
தமிழ்நாடு மின்சார வாரிய இணையதள முகவரிகள் மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இணையதளத்தின் மூலம் மின் இணைப்பு விண்ணப்பம், மின் கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
நவீனமாக மின்னணு முறையில் மின்சார வாரியத்தை மேம்படுத்தும் முயற்சிகளில் அரசு ஈடுபட்டுள்ள நிலையில், மின்வாரிய இணையதள முகவரிகள் மாற்றப்பட்டுள்ளன. இதுபற்றிய செய்திக்குறிப்பை மின்வாரியம் வெளியிட்டுள்ளது.
பழைய இணையதள முகவரிகள்
www.tangedco.gov.in
www.tantransco.gov.in
www.tnebltd.gov.in
புதிய இணையதள முகவரிகள்
www.tangedco.org
www.tantransco.org
www.tnebltd.org
தற்போது மாற்றப்பட்டுள்ள புதிய இணையதள முகவரிகளை அக்டோபர் 28 ஆம் தேதி முதல் அனைவரும் பயன்படுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.