"காங்கிரஸ் கட்சியின் செல்பாடுகளில் மாற்றம் தேவை" - கார்த்திக் சிதம்பரம்

"காங்கிரஸ் கட்சியின் செல்பாடுகளில் மாற்றம் தேவை" - கார்த்திக் சிதம்பரம்

"காங்கிரஸ் கட்சியின் செல்பாடுகளில் மாற்றம் தேவை" - கார்த்திக் சிதம்பரம்
Published on

காங்கிரஸ் கட்சியின் செயல்பாட்டில், நிர்வாகத்தில், கட்டமைப்பில் மாற்றம் வர வேண்டும் என கார்த்திக் சிதம்பரம் தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த கார்த்திக் சிதம்பரம் பேசும்போது... ஜெயலலிதாவிற்கு உயர்ந்த சிகிச்சை அளிக்கப்பட்டது உண்மை. ஜெயலலிதா மரணம் இயற்கையான மரணம் என்பதுதான் எனது கருத்து. அதிமுக செல்வாக்குள்ள பெரிய கட்சி. ஒற்றை தலைமை இல்லாமல் அது தடுமாறுகிறது.

பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியில் சேர்வது, சேராதது என்பது முக்கியமல்ல. ஆனால், அவர் சொன்னது போல் காங்கிரஸ் கட்சியின் செயல்பாட்டில், நிர்வாகத்தில், கட்டமைப்பில் மாற்றம் வர வேண்டும். இஸ்லாமியப் பெண்களுக்கு பாதுகாப்பாக பாஜக செயல்படுகிறது என்று அண்ணாமலை கூறியிருப்பது அவர், கற்பனை உலகத்தில் வாழ்கிறார் என்பதையே காட்டுகிறது.

கோவில் தேரோட்ட விபத்தில் 11 பேர் உயிரிழந்தது மிகுந்த அதிர்ச்சியை கொடுத்துள்ளது என்றும் வேதனையுடன் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com