தமிழக அமைச்சரவை
தமிழக அமைச்சரவைFacebook

தமிழக அமைச்சரவையில் மாற்றம்? முதலமைச்சர் அளித்த பதில்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 27-ஆம் தேதி அமெரிக்கா செல்ல உள்ள நிலையில், அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Published on

தமிழக அமைச்சரவையில் மாற்றமா என தகவல் வருகிறதே என்ற கேள்விக்கு , ‘எனக்கு தகவல் வரவில்லை’ என முதலமைச்சர் ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 27-ஆம் தேதி அமெரிக்கா செல்ல உள்ள நிலையில், அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக முன்னதாக தகவல் வெளியானது.

அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் மூத்த அமைச்சர் உட்பட மூன்று பேர் மாற்றப்பட்டு புதியவர்கள் மூன்று பேருக்கு இடம் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் பெரிய அளவில் இலாகா மாற்றம் இருக்கும் என்றும் அரசு வட்டாரங்களில் தகவல் வெளியானது.

மேலும், அமைச்சரவை மாற்றம் குறித்த அறிவிப்பு இன்று மாலை வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியானாது.

தமிழக அமைச்சரவை
"ரஜினிபோல் குழப்பம் இல்லை.. திட்டமிட்டு அரசியலுக்கு வந்தார் விஜய்"- ரகு பேட்டி!

இந்நிலையில், தமிழக அமைச்சரவையில் மாற்றமா என தகவல் வருகிறதே என்று முதலமைச்சர் ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பியதற்கு, ‘எனக்கு தகவல் வரவில்லை’ என முதலமைச்சர் ஸ்டாலின் தற்போது பதிலளித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com