தமிழ்நாடு
19 எடை வர்த்தக எரிவாயு சிலிண்டர் விலை குறைப்பு
19 கிலோ எடை கொண்ட வர்த்தக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 57 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகிறது. இந்நிலையில் வர்த்தக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 57 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 19 கிலோ எடை கொண்ட எரிவாயு சிலிண்டர் விலை ஆயிரத்து 942 ரூபாய் 50 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் வர்த்தக பயன் பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 101 ரூபாய் உயர்த்தப்பட்டு ஆயிரத்து 999 ரூபாய் 50 காசுகளாக இருந்த நிலையில், இந்த மாதம் விலை குறைக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று 14 புள்ளி 2 கிலோ எடையுள்ள வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மாற்றமின்றி 918 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.