\
7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
Published on

7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் 7 மாவட்டங்களில் அடுத்த 48 மணிநேரத்திற்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்திருக்கிறது. தூத்துக்குடி, ராமநாதபுரம், கன்னியாகுமரி, தஞ்சை, திருவாரூர், நாகை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகக் கூறியுள்ளது.

புதுச்சேரியின் காரைக்கால் மாவட்டத்திலும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தகவல் தெரிவித்திருக்கிறது. இந்த மழை அடுத்த 4 நாட்களுக்கு நீடிக்க வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com