தமிழ்நாடு
காற்று வீசக்கூடும் - மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்
காற்று வீசக்கூடும் - மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்
வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது
இது குறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தியில், இன்று முதல் 23-ஆம் தேதி வரை மாலத்தீவு லட்சத்தீவு பகுதிகளில் 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம். நாளை முதல் கேரள கடலோர பகுதிகள் ,மத்திய கிழக்கு அரபிக்கடல் உள்ளிட்ட பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சின்னக்கல்லாரில் 13 சென்டிமீட்டர், மடத்துக்குளம் 9 சென்டிமீட்டர், கோபிசெட்டிபாளையம் குமாரபாளையம் ,சோலையார் ஆகிய இடங்களில் தலா 7 சென்டிமீட்டர் மழை பெய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.