\
12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
Published on

குமரிக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி வட தமிழகம் வரை நீடிப்பதன் காரணமாக 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தின் உள்மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

நேற்று மதியம் வெளியிடப்பட்ட அறிக்கையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com