தமிழ்நாடு
தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு : வானிலை மையம்
தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு : வானிலை மையம்
தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் 8 மாவட்டஙகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட அற்விப்பில் “நெல்லை, கன்னியாக்குமரி, தூத்துக்குடி,விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை மறுநாள் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.