
தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென் மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த மேலடுக்கு சுழற்சி இலங்கை அருகே நிலைகொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். இதனையடுத்து தமிழக கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் , உள் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறினார். சென்னையை பொறுத்தவரை இன்று மாலையில் இருந்து 2 நாட்களுக்கு அவ்வப்போது மழை பெய்யும் என பாலச்சந்திரன் தெரிவித்தார்.