\
தமிழகத்தில் மழை தொடர வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் மழை தொடர வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் மழை தொடர வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
Published on: 

வங்கக்கடலில் நிலைகொண்டிருக்கும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை தொடர வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

வங்கக்கடலில் உருவான  ‘நிவர்’ புயலானது இலங்கையைக் கடந்து மன்னார் வளைகுடா பகுதியில் மேலடுக்கு சுழற்சியாக நிலை கொண்டுள்ளது.இந்த மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்றும் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில்  லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் லேசான மழை பெய்யவும் வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com