தமிழகத்தில் இன்றும் நாளையும் கன மழைக்கு வாய்ப்பு: சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

தமிழகத்தில் இன்றும் நாளையும் கன மழைக்கு வாய்ப்பு: சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

தமிழகத்தில் இன்றும் நாளையும் கன மழைக்கு வாய்ப்பு: சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை
Published on

தொடர் மழை காரணமாக திருவாரூர், புதுக்கோட்டை, கடலூர், நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் கடந்த 24 மணி நேரமாக பெய்து வரும் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே, கனமழையின் காரணமாக கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்துத்துறை அதிகாரிகளும் அவரவர் அலுவலகத்தில் தயாராக இருக்க வேண்டும் என்றும், எக்காரணம் கொண்டும் தன்னுடைய அனுமதி இல்லாமல் யாரும் விடுப்பு எடுக்கக் கூடாது எனவும் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் அறிவுறுத்தியுள்ளார்.

தொடர் மழையால் பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால், மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் ஜேசிபி இயந்திரங்கள் மற்றும் மரம் வெட்டும் கருவிகளுடன் காவல் துறையினர் தயார் நிலையில் உள்ளனர். இதற்கிடையே, தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள், வட மாவட்டங்கள் உள்பட பெரும்பாலான மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, ராமநாதபுரம், தூத்துக்குடி, நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com