6 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு! நாகை-காரைக்காலில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை!

6 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு! நாகை-காரைக்காலில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை!
6 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு! நாகை-காரைக்காலில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை!

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைத்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நாகப்பட்டினம் காரைக்கால் துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

தென்கிழக்கு வங்காள கடலின் மத்திய பகுதியில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று அதிகாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இலங்கை யாழ்ப்பாணத்திற்கு கிழக்கே சுமார் 600 கிலோமீட்டர் தொலைவிலும், காரைக்காலில் இருந்து கிழக்கு-தென்கிழக்கே 630 கிலோமீட்டர் மற்றும் சென்னைக்கு கிழக்கு- தென்கிழக்கே 670 கிலோமீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.

இதன் காரணமாக நாகப்பட்டினம், காரைக்கால், சென்னை, பாம்பன் உள்ளிட்ட துறைமுகங்களில் இன்று ஒன்றாம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. நாகை மாவட்ட கடல் பகுதியில் கொந்தளிப்பாக காணப்படுகிறது. விசைப்படகு மற்றும் பைபிள் படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

மேலும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம் மற்றும் ராணிப்பேட்டை முதலிய 6 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மற்றும் இன்று மாலை முதல் வட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com