\
தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு
Published on: 

தமிழ்நாட்டில் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக, கரூர், நாமக்கல், சேலம், தருமபுரி, திருச்சி, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மே 15 மற்றும் 16ஆம் தேதிகளில் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தென்காசி, தேனி, நெல்லை மற்றும் கன்னியாகுமாரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.



சென்னையில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனக் கூறப்பட்டுள்ளது. லட்சத்தீவு, கேரளா, குமரிக்கடல், மன்னார் வளைகுடா உள்ளிட்ட பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com