தமிழ்நாட்டில் இயல்பைவிட 90% அதிக மழை!
தமிழகத்தில் இந்தாண்டு இயல்பைவிட 90 சதவீதம் மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்தரி வெய்யில் கடந்த மே 4ஆம் தேதி தொடங்கி மே 28 வரை நிகழவுள்ளது. ஆனால், தற்போதே தமிழகத்தின் பெரும் பகுதிகளில் மழை வெளுத்து வாங்கிவருகிறது. இந்தவகையில், மழைக்குறித்தான முக்கிய அறிவிப்பு ஒன்றினை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்தான அறிவிப்பில்,
தமிழகம் முழுவதும் மார்ச் 1-ஆம் தேதி முதல் தற்போது வரை இயல்பை விட 90 சதவீத அதிக மழை பெய்துள்ளது, அதாவது 19.2 செ.மீ மழை அதிகமாகும். மார்ச் 1 முதல் தற்போது வரை இயல்பாகப் பெய்ய வேண்டி மழையின் அளவு 10 செ.மீ ஆகும். ஆனால் இயல்பை விட 9.2 சதவீதம் மழை அதிகரித்துள்ளது. அதேசமயம், சென்னையில் இயல்பைவிட 83 சதவீதம் அதிக மழைப் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் இயல்பான மழையின் அளவு 6 செ.மீ ஆகும். ஆனால் 28 செ.மீ மழை அதிகமாகப் பதிவாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.