தமிழகத்தில் நேற்றிரவு பரவலாக மழை... இன்றும் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் நேற்றிரவு பரவலாக மழை... இன்றும் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் நேற்றிரவு பரவலாக மழை... இன்றும் மழைக்கு வாய்ப்பு
Published on

தமிழகத்தில் நேற்றிரவு சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது.

சென்னையில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் குளிர்வாட்டி வந்த நிலையில், நேற்று மாலை பல இடங்களில் பரலாக மழை பெய்தது. எழும்பூர், கோடம்பாக்கம், வடபழனி, கே.கே.நகர், கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், தண்டையார்பேட்டை, திருவான்மியூர் உள்ளிட்ட இடங்களில் சாரல் மழை பெய்தது.

திண்டுக்கல்லில் மாலை ஒரு மணி நேரம் மிதமான மழை பெய்தது. இதனால் சாலை மற்றும் தெருக்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. திண்டுக்கல்லை சுற்றியுள்ள செட்டிநாயக்கன்பட்டி, சென்னமநாயக்கன்பட்டி, பூதிபுரம், சின்னாளப்பட்டி ஆகிய பகுதிகளிலும் மிதமான பெய்தது.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டையில் மாலை 5 மணி முதல் பலத்த காற்றுடன் கன மழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரம் நீடித்த மழையால், நகரின் பல இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

விழுப்புரம் மாவட்டத்தில் நள்ளிரவு முதல் விட்டுவிட்டு தொடர்ந்து மழை பெய்து வருகிறது. விக்கிரவாண்டி செஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலையில் மழை பெய்தது.

இதனிடையே இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com