தமிழ்நாடு
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் என்றும் தெரிவித்துள்ளது. தென்மேற்கு, மேற்கு திசையில் இருந்து வட கடலோரப் பகுதிகளில் 45 முதல் 55 கிலோமீட்டர் தூரம் காற்று வீசக்கூடும் எனவும் தென் கடலோர மாவட்டங்களில் 40 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால், தென் தமிழகத்தில் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
மேலும் வட கடலோர மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் வால்பாறை தேவாலா பகுதிகளில் 9 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.