தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ஏமாற்றிய நிலையில் தென்மேற்கு பருவமழையும் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. இதனால் நீர் நிலைகள் வறண்டு போயுள்ளன. நிலத்தடி நீர்மட்டமும் அடிவாங்கியுள்ளதால் சென்னை உட்பட பல இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தெலங்கானவில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாகவும் வெப்பச்சலனத்தினாலும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை அல்லது இரவில் மழை பெய்யும் எனவும் கூறப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக விழுப்புரத்தில் 6 செமீ மழையும் திருவாடானையில் 5 செமீ மழையும் பதிவாகியுள்ளது.