\
தமிழகம் மற்றும் கேரளாவில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகம் மற்றும் கேரளாவில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகம் மற்றும் கேரளாவில் கனமழைக்கு வாய்ப்பு
Published on: 

அரபிக் கடலில் உருவாகி இருக்கும் காற்றழுத்தம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்துக்கு தமிழகம் மற்றும் கேரளாவில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தென்கிழக்கு அரபிக் கடலில் உருவாகி இருக்கும் காற்றழுத்தம் புயலாக மாறும் வாய்ப்பு இருப்பதாகவும், இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்துக்கு தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளிலும், கேரளாவிலும் கனமழை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடல் சீற்றத்துடன் காணப்படும் என்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்றிரவு முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com