தமிழகத்தின் உள்மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதே நிலை அடுத்த 3 நாட்களுக்கு நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெப்பச்சலனம் காரணமாக மழைப்பொழிவு நீடிப்பதாக வானிலை ஆய்வு மையம் விளக்கமளித்துள்ளது .கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பாளையங்கோட்டையில் 105 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. திருச்சி மற்றும் வேலூரில் 103 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியிருக்கிறது. தமிழகத்தில் மொத்தமாக 7 இடங்களில் வெப்பநிலை சதத்தை தாண்டியுள்ளது. சென்னையை பொறுத்தவரை 96 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானதுடன் மாலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.