தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் இன்று பல இடங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழையால் தமிழகத்தின் பல இடங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் கடந்த வாரம் கொட்டித் தீர்த்த மழை அதன் பின் அவ்வளவாக பெய்யவில்லை. இதனிடையே, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவு முதல் விட்டு விட்டு லேசான மழை பெய்து வருகிறது. கிண்டி, மயிலாப்பூர், உள்ளிட்ட இடங்களிலும் மழை பெய்துள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் இன்று பல இடங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று வேதாரண்யத்தில் அதிகபட்சமாக 13 சென்டிமீட்டரும், நாகப்பட்டினத்தில் 9 சென்டி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது.