\
வங்கக் கடலில் 29-ஆம் தேதி புயல் உருவாக வாய்ப்பு

வங்கக் கடலில் 29-ஆம் தேதி புயல் உருவாக வாய்ப்பு

வங்கக் கடலில் 29-ஆம் தேதி புயல் உருவாக வாய்ப்பு
Published on: 

வங்கக் கடலில் வரும் 29-ஆம் தேதி புயல் உருவாக வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாளை மறுநாள் இந்தியப் பெருங்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகக் கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது. அந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியானது வரும் 27-ஆம் தேதியன்று காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளதாகவும், இந்தக் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தமிழகத்தை நோக்கி‌ நகர்ந்து மேலும் வலுப்பெற்று 29-ஆம் தேதி புயலாக உருவாக வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, 29-ஆம் தேதி முதல் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com