\
காவலர் தேர்வு எழுதவந்த செயின் பறிப்பு கொள்ளையன் - சுற்றிவளைத்த போலீஸ்

காவலர் தேர்வு எழுதவந்த செயின் பறிப்பு கொள்ளையன் - சுற்றிவளைத்த போலீஸ்

காவலர் தேர்வு எழுதவந்த செயின் பறிப்பு கொள்ளையன் - சுற்றிவளைத்த போலீஸ்
Published on: 

மதுரையில் காவலர் தேர்வு எழுத வந்த பிரபல செயின் பறிப்பு கொள்ளையனை காவல்துறையினர் சுற்றிவளைத்து பிடித்தனர். 

மதுரை கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த விஜயகாந்த். இவர் பல்வேறு செயின்பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டவர். இதனால் செயின் பறிப்பு உள்ளிட்ட பல வழக்குகளில் இவர் தேடப்பட்டு வந்தார். இந்நிலையில் காவலர் தேர்வு ஒன்றி இவர் விண்ணப்பித்துள்ளார். இதுதொடர்பான தகவல் காவல்துறையினருக்கு கிடைத்துள்ளது. 

அதன்படி, நேற்று அழகர்கோவில் அருகே உள்ள தனியார் பாலிடெக்னிக்கில் நடைபெற்ற காவலர் தேர்வில் பங்கேற்று தேர்வெழுதிய விஜயகாந்த்தை காவல்துறையினர் சுற்றிவளைத்தனர். அவர் தேர்வு எழுதி முடிந்தவுடன் அவர் கைது செய்தனர். தற்போது அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com