வெம்பக்கோட்டை 3-ம் கட்ட அகழாய்வு
வெம்பக்கோட்டை 3-ம் கட்ட அகழாய்வுpt desk

வெம்பக்கோட்டை 3-ம் கட்ட அகழாய்வு: புதிதாக கண்டறியப்பட்ட பீங்கானால் ஆன உருண்டை வடிவ மணி

வெம்பக்கோட்டை விஜய கரிசல்குளத்தில் 3-ம் கட்ட அகழாய்வில் பீங்கானால் தயாரிக்கப்பட்ட உருண்டை வடிவ மணி, மாவு கற்களால் செய்யப்பட்ட நீள் வட்ட வடிவ மணிகள், அலங்கரிக்கப்பட்ட சங்கு வளையல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன
Published on

செய்தியாளர்: மணிகண்டன்

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜய கரிசல்குளத்தில் 3ம் கட்ட அகழாய்வில் 16 குழிகள் தோண்டப்பட்டு, அதில் இருந்து உடைந்த நிலையில் ஆன சுடுமண் உருவ பொம்மை, கண்ணாடி மணிகள், சங்கு வளையல்கள், வட்டச் சில்லு, தங்கமணிகள் என இதுவரை 2850-க்கும் மேற்பட்ட பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

வெம்பக்கோட்டை 3-ம் கட்ட அகழாய்
வெம்பக்கோட்டை 3-ம் கட்ட அகழாய்pt desk

இந்நிலையில் புதிதாக தோண்டப்பட்ட குழியில் பியான்ஸ் எனப்படும் பீங்கானால் தயாரிக்கப்பட்ட உருண்டை வடிவ மணி, மாவு கற்களால் செய்யப்பட்ட நீள் வட்டவடிவ மணிகள், அலங்கரிக்கப்பட்ட சங்கு வளையல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

வெம்பக்கோட்டை 3-ம் கட்ட அகழாய்வு
சிவகங்கை | 100 நாள் வேலை.. கிராம மக்களுடன் ஊராட்சி அலுவலகத்திற்கு சென்ற சீமான் தாயார் அன்னம்மாள்

இதன் மூலம் முந்தைய தமிழர்கள் வாணிபத்தில் ஈடுபட்டுள்ளது தெரிய வருகிறது என்று அகவாழ்வு இயக்குனர் பாஸ்கர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com