\
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மணிப்பூருக்கு பணியிட மாற்றம்

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மணிப்பூருக்கு பணியிட மாற்றம்

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மணிப்பூருக்கு பணியிட மாற்றம்
Published on

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எம்.வி முரளிதரன் மணிப்பூர் உயர்நீதி மன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.

உச்சநீதிமன்றத்தின் கொலீஜியம் உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகளை நியமணம் செய்வதற்கும், அவர்களை பணியிட மாற்றம் செய்வதற்கும் பரிந்துரை செய்யும். அந்தவகையில் கொலீஜியம் கடந்த ஜனவரி மாதம் 15 ஆம் தேதி நீதிபதி எம்.வி.முரளிதரனை மணிப்பூர் உயர்நீதிமன்றத்திற்கு பணியிடமாற்றம் செய்ய பரிந்துரை செய்திருந்தது.

இந்தப் பணியிடை மாற்றத்திற்கு எதிராக நீதிபதி எம்.வி.முரளிதரன் கொலீஜியத்திடம் முறையிட்டிருந்தார். அதில் தன்னை சென்னை உயர்நீதிமன்றத்திலேயே பணியில் நீடிக்க அனுமதி வழங்கும்படி கேட்டுக் கொண்டிருந்தார். அத்துடன் வேண்டுமென்றால் தன்னை மணிப்பூருக்குப் பதிலாக கர்நாடகா, ஆந்திர பிரதேசம்,கேரளா அல்லது ஒடிசா ஆகிய உயர்நீதிமன்றங்களில் ஏதேனும் ஒன்றிற்கு பணியிடை மாற்றம் செய்ய வேண்டும் எனக் கேரியிருந்தார்.

இந்நிலையில் அவரின் கோரிக்கையை ஏற்க மறுத்த கொலீஜியம் அதனை நீராகரித்துள்ளது. அத்துடன் அவரை மணிப்பூர் உயர்நீதிமன்றத்திற்கு பணியிடை மாற்றம் செய்யும் முடிவை மறுபடியும் பரிந்துரை செய்துள்ளது. இதனால் நீதிபதி எம்.வி முரளிதரன் தற்போது சென்னை உயர்நீதிமன்றத்திலிருந்து மணிப்பூர் உயர்நீதி மன்றத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com