\
''மாநிலங்களுக்கு போதிய தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்கவில்லை'' - அபிஜித் பானர்ஜி

''மாநிலங்களுக்கு போதிய தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்கவில்லை'' - அபிஜித் பானர்ஜி

''மாநிலங்களுக்கு போதிய தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்கவில்லை'' - அபிஜித் பானர்ஜி
Published on

மாநிலங்களுக்கு போதிய அளவிலான கொரோனா தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்க தவறிவிட்டது என பொருளாதாரத்திற்காக நோபல் பரிசு பெற்ற அபிஜித் விநாயக் பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.

மேற்குவங்க மாநிலத்தில் கொரோனா மேலாண்மை கமிட்டியில் இடம் பெற்றுள்ள பானர்ஜி, அம்மாநில முதலமைச்சரை சந்தித்து பேசினார். அப்போது, ஒட்டுமொத்த நாட்டிற்கும் தேவையான அளவுக்கு கொரோனா தடுப்பூசியை வழங்கும் திறன் மத்திய அரசிடம் இல்லாததே தற்போதைய பிரச்னைக்கு காரணம் என தெரிவித்தார்.

மேலும், மூன்றாவது அலையின் தாக்கத்தால் நாட்டின் ஒட்டுமொத்த ஜிடிபி வளர்ச்சி 7 சதவிகிதத்திற்கும் குறைவாக சரிய நேரிடும் என்றும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com