மத்திய பல்கலைகழக மாணவர்கள் போராட்டம்

மத்திய பல்கலைகழக மாணவர்கள் போராட்டம்

மத்திய பல்கலைகழக மாணவர்கள் போராட்டம்
Published on

திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக் கழக மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஜல்லிகட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வலியுறுத்தியும், பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் எனவும் தமிழகம் முழுவதும் வரலாறு காணாத அளவில் போராட்டம் நடைபெற்று வருகிறது. மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் என பலரும் மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து தமிழர்களின் பாரம்பரிய, பண்பாட்டு அடையாளமான ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக் கழக மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com