‘கூடங்குளம் எரிபொருள் கழிவுகள் பாதுகாப்பாக கையாளப்படுகின்றன’ - மத்திய அரசு

‘கூடங்குளம் எரிபொருள் கழிவுகள் பாதுகாப்பாக கையாளப்படுகின்றன’ - மத்திய அரசு
‘கூடங்குளம் எரிபொருள் கழிவுகள் பாதுகாப்பாக கையாளப்படுகின்றன’ - மத்திய அரசு

கூடங்குளம் மற்றும் கல்பாக்கம் மின்னுற்பத்தி நிலையங்கள் அனைத்து வகையான இயற்கை பேரிடர்களையும் தாங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.

தமிழகத்தில் கூடங்குளம் மற்றும் கல்பாக்கம் ஆகிய இடங்களில் அணுமின் நிலையங்கள் செயல்படுகின்றன. இதன்மூலம் மின் உற்பத்தி செய்யப்படுகின்றன. அதேசமயம் இவற்றின் பாதுகாப்பு குறித்து பல்வேறு கேள்விகளும் எழுப்பப்பட்டு வருகின்றன. இதுதொடர்பாக மத்திய அரசு மற்றும் பிரதமர் அலுவலகங்களுக்கு பல கடிதங்களும் எழுதப்பட்டிருந்தன.

இந்நிலையில், கூடங்குளம் மற்றும் கல்பாக்கம் மின் உற்பத்தி நிலையங்களில் மீதமாகும் எரிபொருள் கழிவுகள் பத்திரமாகக் கையாளப்படுவதாக மத்திய அரசு ‌சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான கேள்விக்கு பிரதமர் அலுவலகம் ‌எழுத்துபூர்வமாக பதிலளித்துள்ளது. அதில் கூடங்குளம் அணு உலையின் ஆறாயிரம் மெகாவாட் மின்னுற்பத்தி செய்யும் 3, 4, 5 மற்றும் 6 ஆகிய அலகுகள் முழுமையாக முடிக்கப்பட்ட பின்னர் வரும் 2026ஆம் ஆண்டு முதல் உற்பத்தி தொடங்கும் என எதிர்பார்ப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடங்குளம் மற்றும் கல்பாக்கம் மின்னுற்பத்தி நிலையங்கள் அனைத்து வகையான இயற்கை பேரிடர்களையும் தாங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாகவும், இதில் பயன்படுத்தப்பட்டு மீதமாகும் எ‌ரிபொருட்கள் பாதுகாப்பாக கையாளப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com