தமிழ்நாடு
தமிழக ஊரக உள்ளாட்சிக்கு ரூ.295 கோடி நிதி ஒதுக்கீடு : மத்திய அரசு
தமிழக ஊரக உள்ளாட்சிக்கு ரூ.295 கோடி நிதி ஒதுக்கீடு : மத்திய அரசு
தமிழகத்திற்கு ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்க வேண்டிய தொகையில் ரூ.295 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
மத்திய அரசிடம் தமிழக அரசு நிதி கோரியிருந்தது. இதற்கிடையே பொது முடக்கத்தால் மாநில வருவாய் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்க வேண்டிய தொகையில் தமிழகத்திற்கு ரூ.295 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 15வது நிதிக்குழுவின் கோரிக்கையை ஏற்று நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.