\
ஓபிசி பிரிவினருக்கு 27% இட ஒதுக்கீடுக்கு மத்திய அரசு ஒப்புதல்

ஓபிசி பிரிவினருக்கு 27% இட ஒதுக்கீடுக்கு மத்திய அரசு ஒப்புதல்

ஓபிசி பிரிவினருக்கு 27% இட ஒதுக்கீடுக்கு மத்திய அரசு ஒப்புதல்
Published on

முதுநிலை மருத்துவ படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மேற்படிப்பு இடங்களில் ஓபிசி பிரிவினருக்கு 50% செய்யக் கோரி அரசியல் கட்சிகள் சார்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தின் பரிந்துரைப்படி சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதுதொடர்பாக வரும் ஜூன் 22ஆம் தேதிக்குள் மத்திய அரசு பதிலளிக்கச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை காணொலிக்காட்சி மூலம் நடைபெற்றது. இந்நிலையில் தமிழகத்தில் ஓபிசி பிரிவினருக்கு 50% ஒதுக்கீடு கோரப்பட்டிருந்ததற்குப் பதிலளித்த மத்திய அரசு, 27% இட ஒதுக்கீடு வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் மத்திய அரசு இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com