2020-21 ம் ஆண்டில் 85க்கும் மேற்பட்ட யானைகள் உயிரிழப்பு: மக்களவையில் மத்திய அரசு தகவல்

2020-21 ம் ஆண்டில் 85க்கும் மேற்பட்ட யானைகள் உயிரிழப்பு: மக்களவையில் மத்திய அரசு தகவல்
2020-21 ம் ஆண்டில் 85க்கும் மேற்பட்ட யானைகள் உயிரிழப்பு: மக்களவையில் மத்திய அரசு தகவல்

2020 - 21 ஆண்டில், 65 யானைகள் மின்சாரம் தாக்கி உயிரிழந்திருப்பதாக மத்திய அரசு தகவல் கூறியுள்ளது.

மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் மக்களவையில் இன்று தெரிவித்துள்ள தகவலின்படி, “ரயில் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் 2018-19 ம் ஆண்டில் 19 யானைகளும்; 2019-20 ம் ஆண்டில் 14 யானைகளும்; 2020-21 ம் ஆண்டில் 12 யானைகளும் உயிரிழந்துள்ளது.

மின்சாரம் தாக்கியதில் 2018-19 ம் ஆண்டில் 81 யானைகளும்; 2019-20 ம் ஆண்டில் 76 யானைகளும்; 2020-21 ம் ஆண்டில் 65 யானைகளும் உயிரிழந்துள்ளது.

வேட்டையாடப்பட்டதில் 2018-19 ம் ஆண்டில் 6 யானைகளும்; 2019-20 ம் ஆண்டில் 9 யானைகளும்; 2020-21 ம் ஆண்டில் 14 யானைகளும் கொல்லப்பட்டுள்ளது. போலவே விஷம் வைத்து 2018-19 ம் ஆண்டில் 9 யானைகளும்; 2020-21 ம் ஆண்டில் 2 யானைகளும் கொல்லப்பட்டுள்ளது (2019-20 ம் ஆண்டில் எதுவுமில்லை).

புலிகளை பொறுத்தவரை 2018 -34 புலிகளும், 2019 -17 புலிகளும்; 2020 - 7 புலிகளும் கொல்லப்பட்டுள்ளது.

வனவிலங்குகளை கொல்லுதல் மற்றும் துன்புறுத்தல் தடுப்பு சட்டங்கள் கீழ் 2018 -ம் ஆண்டில் 1099 பேரும்; 2019 -ம் ஆண்டில் 1506 பேரும், 2020 -ம் ஆண்டில் 1231 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- நிரஞ்சன் குமார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com