தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.533 கோடி நிதி முன்கூட்டியே விடுவிப்பு!

தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.533 கோடி நிதி முன்கூட்டியே விடுவிப்பு!

தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.533 கோடி நிதி முன்கூட்டியே விடுவிப்பு!

தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 533 கோடி ரூபாய் நிதியை விடுவித்துள்ளது மத்திய அரசு.

நாடு முழுவதும் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு 8 ஆயிரத்து 923 கோடி ரூபாய் விடுவித்துள்ள மத்திய அரசு, இந்த நிதியாண்டுக்கான முதல் தவணையை விடுவித்ததாக அறிவித்துள்ளது. வழக்கமாக ஜூன் மாதம் வழங்கப்படக் கூடிய நிதி, தற்போது ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கருத்தில் கொண்டு, முன்கூட்டியே வழங்கப்படுவதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், உத்தரப் பிரதேச மாநிலத்துக்கு அதிகபட்சமாக, ஆயிரத்து 441 கோடி ரூபாயும், பிஹார் மாநிலத்துக்கு 741 கோடி ரூபாயும், மேற்கு வங்க மாநிலத்துக்கு 652 கோடி ரூபாயும் விடுவிக்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்திற்கு 588 கோடி ரூபாயும், ராஜஸ்தான் மாநிலத்துக்கு 570 கோடி ரூபாயும் விடுவிக்கப்பட்டுள்ளதாக, மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்தத் தொகையை உள்ளாட்சி அமைப்புகள் கொரோனா தடுப்பு பணிகளுக்காக பயன்படுத்திக் கொள்ளலாம் என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com