பசுமை விரைவுச் சாலைக்காக ஆர்ஜிதம் செய்யப்படும் கிராம நிலங்கள்: கொந்தளிக்கும் மக்கள்

பசுமை விரைவுச் சாலைக்காக ஆர்ஜிதம் செய்யப்படும் கிராம நிலங்கள்: கொந்தளிக்கும் மக்கள்
பசுமை விரைவுச் சாலைக்காக ஆர்ஜிதம் செய்யப்படும் கிராம நிலங்கள்: கொந்தளிக்கும் மக்கள்

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி வட்டத்தில் உள்ள கிராம நிலங்கள் தேசிய நெடுஞ்சாலை பணிக்கு ஆர்ஜிதம் செய்யப்பட உள்ளதாக மத்திய அரசு அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக சாலை போக்கவரத்து மற்றும் நெஞ்சாலைத்துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிக்கையில், தருமபுரி மாவட்டம் அரூர் மற்றும் பாப்பிரெட்டிபட்டி வட்டத்தில் உள்ள கிராமப் பகுதிகள் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிக்கு ஆர்ஜிதம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதற்கு ஆட்சேபணைகள் தெரிவிப்பவர்கள் 21 நாட்களுக்குள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எழுத்து மூலமாக அதனை மனுவாக தாக்கல் செய்ய கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அதன்பின் இது தொடர்பான விசாரணை நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஆட்சேபணை தெரிவிக்கும் மனுதாரர்கள் காலை 11 மணியிலிருந்து 2 மணிக்குள் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட வருவாய் அலுவலர் முன் ஆஜராக வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

முன்னதாக சென்னை- சேலம் இடையே 274.3 கி.மீ தொலைவுக்கு பசுமை விரைவுச் சாலை திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்தது. சுமார் 10,000 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ள இத்திட்டத்திற்கு சுமார் 2,343 ஹெக்டேர் நிலம் தேவைப்படுகிறது. இதற்காக திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்ட நிலையில் தருமபுரி, சேலம் ஆகிய பகுதிகளில் உள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் 100 ஹெக்டேர் பரப்பளவிற்கு நிலம் கையகப்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகின. இதனால் அப்பகுதியில் உள்ள மரங்கள், பறவை, விலங்கினங்கள் ஆகியவற்றிற்கு பாதிப்பு ஏற்படும் என விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. மரங்கள் வெட்டப்படும் என்ற அபாய நிலை ஏற்படும் என்றும் விவசாயிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் நிலம் கையகப்படுத்தும் பணியை மத்திய அரசு துவங்கியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com