மதுரையில் சர்வதேச விமான நிலையம் அமைக்காமல் மத்திய அரசு புறக்கணிப்பு - சு.வெங்கடேசன் எம்.பி

மதுரையில் சர்வதேச விமான நிலையம் அமைக்காமல் மத்திய அரசு புறக்கணிப்பு - சு.வெங்கடேசன் எம்.பி
மதுரையில் சர்வதேச விமான நிலையம் அமைக்காமல் மத்திய அரசு புறக்கணிப்பு - சு.வெங்கடேசன் எம்.பி

இந்தியாவிலேயே GST வரி அதிகம் செலுத்தும் மாநிலம் தமிழ்நாடு. ஆனால், மதுரையில் 4வது சர்வதேச விமான நிலையம் அமைக்க மத்திய அரசு புறக்கணிக்கின்றது என மதுரை நடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்திருக்கிறார்.

மதுரை நுகர்பொருள் மொத்த வியாபாரிகள் சங்க 68 வது ஆண்டு விழா அவனியாபுரத்தில்  நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருத்தினராக வணிகவரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி மற்றும் மதுரை நடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய சு.வெங்கடேசன், “மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்ற மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் ஜோதிர் ஆத்தியா சித்தியாவிடம் கோரிக்கை வைத்தோம். ஆனல் மத்திய அமைச்சர் தமிழகத்திற்கு சென்னை ,திருச்சி , கோவை உள்பட 3 சர்வதேச விமான நிலையங்கள் உள்ளது. பல்வேறு மாநிலங்களில் ஒரே ஒரு சர்வதேச விமான நிலையம் அமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர் ஆனால் நீங்கள் 4வது சர்வதேச விமான நிலையம் அமைக்க விடும் கோரிக்கையை ஏற்க முடியாது என கூறினார். ஜிஎஸ்டி வரியில் இந்தியாவிலேயே அதிக வரி செலுத்தும் இரண்டாவது மாநிலமாக தமிழகம் உள்ளது. இந்தியா முழுவதும் உள்ள 21 மாநிலங்களில் மொத்த ஜிஎஸ்டி வரி 7ஆயிரத்து 200 கோடி வரி கிடைக்கிறது, ஆனால் தமிழகத்தில் இருந்து மொத்தம் 7 ஆயிரத்து 800 கோடி வரி செலுத்துகிறோம்” என தெரிவித்தார்

மேலும், “இந்தியாவிலேயே ஜிஎஸ்டி வரி அதிகம் செலுத்தும் மகாராஷ்டிர மாநிலத்தில் இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் தலைமை அலுவலகங்கள் உள்ளது, ஆகையால் அங்கு அதிக ஜிஎஸ்டி வரி கிடைக்கின்றது. ஆனால் தமிழகத்தைப் பொருத்தவரை இந்தியா முழுமைக்கும் சேர்த்து அதிகம் ஜிஎஸ்டி வரி செலுத்துகிறது. ஆகையால் இந்தியாவின் மொத்த வருவாயில் தனிப்பெரும் வருவாயாக அதிகம் ஜிஎஸ்டி வரி செலுத்துவதால் தமிழகத்திற்கு தேவையான வசதிகளை மத்திய அரசு செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம். இது குறித்து நான் எழுதிய ட்விட்டர் செய்தி பரபரப்பாக மத்திய அரசின் பார்வைக்கு சென்றுள்ளது” என தெரிவித்தார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com