முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான சாந்தன் இலங்கைக்கு செல்ல மத்திய அரசு அனுமதி!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான சாந்தன் இலங்கைக்கு செல்ல மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இரண்டு நாளில் சாந்தன் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுவார் என மாவட்ட ஆட்சியர் புதிய தலைமுறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
சாந்தன்
சாந்தன்pt web

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான சாந்தன் இலங்கைக்கு செல்ல மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இரண்டு நாளில் சாந்தன் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுவார் என மாவட்ட ஆட்சியர் புதிய தலைமுறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி விடுதலை செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் உள்ள சிறப்பு முகாமில் சாந்தன் தங்க வைக்கப்பட்டிருந்தார். உடல்நிலை மோசமானதால் கடந்த 25.01.2024 அன்று திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் 26.01.2024 அன்று சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மத்திய அரசு அவரை அவருடைய சொந்த நாட்டுக்கு அனுப்ப அனுமதி கடிதத்தை இன்று மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமாருக்கு அனுப்பி உள்ளது.

இத்தகவல் தொடர்பாக திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமாரை தொடர்பு கொண்டு பேசிய பொழுது, சாந்தன் இரண்டு நாட்களில் இலங்கைக்கு அனுப்பப்படுவார். அவரே விமான டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம். டிக்கெட் விபரங்கள் அகாரிகள் கையில் வந்தவுடன் அவருக்கு எக்ஸிட் பர்மிட் கொடுக்கப்பட்டு இலங்கைக்கு அனுப்பப்படுவார் என தகவல் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் வேலூர் மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வந்தவர்களை உச்ச நீதிமன்றம் கடந்த 12.11.2022 அன்றைக்கு விடுதலை செய்தது. அதில் ஒருவரான சாந்தன் திருச்சி மத்திய சிறை சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தார்.

இவர் இலங்கையை பூர்வீகம் கொண்டவர் என்பதால் அம்முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பின்னர் சென்னைக்கு மாற்றப்பபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com