தமிழகத்தில் 2 நாட்கள் ஆய்வு செய்த மத்தியக் குழுவினர், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
கன்னியாகுமரியில் ஏற்பட்ட ஒகி புயல் பாதிப்புகளை மத்தியக் குழுவினர் கடந்த இரண்டு நாட்களாக ஆய்வு செய்தனர். அத்துடன் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலும் அவர்கள் ஆய்வு மேற்கொண்டனர். இந்நிலையில் புயல் பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தலைமைச்செயலகத்தில் சந்தித்து மத்தியக் குழுவினர் ஆலோசனை நடத்தினர்.
இதில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், ஜெயக்குமார், தங்கமணி மற்றும் உயரதிகாரிகள் பங்கேற்றனர். இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு, தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், தேவைப்படும் நிதி குறித்து மத்தியக் குழுவினர், மத்திய அரசுக்கு அறிக்கை அளிக்கவுள்ளனர். அந்த அறிக்கை 10 நாட்களுக்குள் அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.