\
ரயில் படியில் அமர்ந்து போன் பேசிய பயணி : செல்போனை பறித்த கும்பல்

ரயில் படியில் அமர்ந்து போன் பேசிய பயணி : செல்போனை பறித்த கும்பல்

ரயில் படியில் அமர்ந்து போன் பேசிய பயணி : செல்போனை பறித்த கும்பல்
Published on

வடமாநிலத்திலிருந்து ரயிலில் சென்னை வந்த பயணியிடம் செல்போனை பறித்துச் சென்றவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். 

திருவள்ளுர் மாவட்டம் நந்தியம்பாக்கம் ரயில் நிலையத்தில் சென்னையை நோக்கி சென்றுக்கொண்டுயிருந்த கோரமண்டல் விரைவு ரயிலில், மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த சித்திஸ்வரன் என்ற பயணி செல்போனில் பேசியபடியே ரயில் படிக்கட்டில் அமர்த்தபடி பயணித்துக்கொண்டுயிருந்தார். லூப்லைனை கடக்கும் போது குறைந்த வேகத்தில் ரயில் சென்றுக்கொண்டுயிருந்தது. அப்போது ரயில் நிலையத்தில் நின்றுக்கொண்டு இருந்த 4 பேர் சித்திஸ்வரன் கையில் இருந்த செல்போனை பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். 

அத்துடன் அவர்கள் சித்தீஸ்வரனை இழுத்து கீழே தள்ளியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த சித்திஸ்வரனிடம் இருந்து, செல்போனை பறித்துக்கொண்டு 4 பேரும் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த சித்திஸ்வரனை மீட்ட பயணிகள், சென்னை அரசு ஸ்டேன்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

தற்போது அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து கொருக்குபேட்டை ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com