தமிழ்நாடு
'மெட்டி ஒலி' உமா மகேஸ்வரி உடலுக்கு பிரபலங்கள் அஞ்சலி
'மெட்டி ஒலி' உமா மகேஸ்வரி உடலுக்கு பிரபலங்கள் அஞ்சலி
உடல்நலக் குறைவால் காலமான மெட்டி ஒலி சீரியல் நடிகை உமா மகேஸ்வரியின் உடலுக்கு நடிகர், நடிகைகள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
திருவள்ளூர் மாவட்டம் காட்டுப்பாக்கத்தில் வசித்து வந்த 40 வயதான உமா மகேஸ்வரி மஞ்சள் காமாலை நோயால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் தாயாரின் சொந்த ஊரான ஈரோட்டிற்கு சென்றிருந்த உமா மகேஸ்வரி ரத்த வாந்தி எடுத்து அவதிப்படவே, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இதையடுத்து காட்டுப்பாக்கத்துக்கு கொண்டுவரப்பட்ட அவரது உடலுக்கு பல்வேறு திரைப்பிரபலங்களும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.