விபத்திற்குப்பின் ஆளின்றி சிறிது தூரம் சீராக சென்ற பைக் -  சிசிடிவி காட்சிகள்

விபத்திற்குப்பின் ஆளின்றி சிறிது தூரம் சீராக சென்ற பைக் - சிசிடிவி காட்சிகள்

விபத்திற்குப்பின் ஆளின்றி சிறிது தூரம் சீராக சென்ற பைக் - சிசிடிவி காட்சிகள்
Published on

கோவையில் இளைஞர் ஒருவர் விபத்தில் சிக்கி கீழேவிழுந்த நிலையில், அவர் ஓட்டிச்சென்ற இரு சக்கர வாகனம் மட்டும் சில அடி தூரம் தனியாக சென்ற வியப்பூட்டும் வீடியோ வெளியாகி உள்ளது.

கோவையில் இளைஞர் ஒருவர் விபத்தில் சிக்கி தடுமாறி கீழே விழுந்த நிலையில் அவர் இயக்கி வந்த இருசக்கர வாகனம் சில அடி தூரம் கி இளம் தானாக இயங்கி சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

நேற்று மதியம் குறிச்சி பகுதியின் ஒரு வழிப்பாதையில் கல்லூரி மாணவர் இரு சக்கரத்தில் செல்கையில் எதிர்பாராத விதமாக எதிரே வந்த கார் மோதியதில் நிலை தடுமாறி விழுந்தார். விழுந்த கல்லூரி மாணவருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரால் நிற்ககூட முடியவில்லை. அருகே இருந்த பொதுமக்கள் உடனடியாக ஓடிச்சென்று அவரை மருத்துவமனையில் சேர்ந்தனர்.

விபத்தின் போது மாணவன் வாகனத்தில் இருந்து கீழே விழுந்தாலும், இரு சக்கர வாகனம் மட்டும் நிற்காமல் சில அடி தூரம் தானாகச் சென்றது. எதிரே வந்த வாகனங்கள் மீது மோதாமல் சிறுது தூரம் சென்று கீழே விழுந்தது. மேற்கொண்டு விபத்து நடக்கவில்லை. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com